ஹரம் சரீப் நேரலை பிளே(PLAY) பொத்தானை அழுத்தவும்

சனி, 20 ஆகஸ்ட், 2011

குடி தண்ணீரை சுத்தமாக்க வாழை பழத்தோல்

                        குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஒப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
                            அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் இரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு இரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன், நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

                            இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் சப்பாத்துக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீர் சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

                            அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும். எவ்வித இரசாயனப் பொருட்களையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

நோன்பின் மாண்பு

அமல்கள் செய்ய நன்மை புரியும் அருமையான ரமலானாம்.

அண்ணல் நபிமீது ஸலவாத்து சொல்லும் சிறப்பு வாய்ந்த ரமலானாம்.

திரும‌றை ஓதி தீன்வ‌ழி ந‌ட‌க்கும் திறமையான‌ ரமலானாம்.

திக்ருக‌ள் செய்து அன்பாய்ப் ப‌ழ‌கும் சிற‌ப்பு வாய்ந்த‌ ரமலானாம்.

வான்ம‌றை ஓதி வாழ்த்துக்க‌ள் கூறும் இனிமையான‌ ரமலானாம்.

வ‌ல்லோனைத் தொழுது இபாத‌த்துக‌ள் செய்யும் க‌ண்ணிய‌ம் மிக்க‌ ரமலானாம்.

பாவ‌ங்க‌ள் போக்கி ந‌ன்மைக‌ள் செய்யும் ப‌ண்புவாய்ந்த‌ ரமலானாம்.

பரக்கத்தான ரஹ்மத் பொழியும் புண்ணியம் மிகுந்த ரமலானாம்.

தராவீஹ் தொழுது குர்ஆன் ஓதும் சிறப்புமிக்க ரமலானாம்.

தஹஜ்ஜுத் தொழுது அமல்கள் செய்யும் சிறப்புமிக்க ரமலானாம்.

ஸ‌லவாத் ஓதி ஸ்லாம் சொல்லும் சங்கை வாய்ந்த ரமலானாம்.

ஸஹர் செய்து அமல்கள் செய்யும் அருள்மிகுந்த ரமலானாம்.

அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்ளும் அன்பான ரமலானாம்.

அண்ணல் நபியின் ஷஃபாஅத்தை அடையச் செய்யும் ரமலானாம்.

லைலத்துல் கத்ரு என்னும் இரவுள்ள சிறப்பு மிக்க ரமலானாம்.

ஏழைக‌ளுக்கு த‌ர்ம‌ம் செய்யும் ஏற்ற‌ம் வாய்ந்த‌ ரமலானாம்.

ஆக்கம்:
தீன் இசைக்கவிஞர்
அ.மு.க. அப்துஸ்ஸலாம்
அதிராம்பட்டினம்
.

வியாழன், 28 ஜூலை, 2011

ரமலானில் செய்ய வேண்டிய அமல்கள்

ரமலானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு
                “இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்.
                  “பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்).

2.இரவு நேரத் தொழுகை
              “இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்:” (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

3. தருமம்
              “நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)

தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
                “நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்).

4. குர்ஆன் ஓதுதல்
                    ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.


5.இஃதிகாஃப்
                நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
                  இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா
                “ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்).

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது
                லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்
                “நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக் கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18).

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

திங்கள், 25 ஜூலை, 2011

அதிரை- பொது அறிவு தகவல்

    • கடற்கரை தெரு பள்ளிவாசல்: 1440
    • மேலத்தெரு ஜும் ஆ பள்ளிவாசல்: 1638
    • தபால் நிலையம் : 1898 
    • ஸலாஹிய்யா அரபிக்கல்லூரி : 1900 
    • ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி : 1914
    • சம்சுல் இஸ்லாம் சங்கம்: 1920 
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (எண்:1) : 1920 
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (எண்:2‍) : 1930
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(நடுத்தெரு): 1938
    • ரயில் நிலையம்: 1938 
    • மின்சாரம் : 1938
    •  பஸ் போக்குவரத்து : 1942
    • புகாரி ஷரீப் : 1942 
    • காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி: 1949 
    • அரசு மருத்துவமனை: 1951 
    • அரசு நூலகம் : 1955 
    • வானிலை ஆராய்ச்சி நிலையம் : 1960
    • கூட்டுறவு வங்கி : 1962
    • கனரா வங்கி : 1963
    • அரசு கால்நடை மருத்துவமனை : 1966
    • இமாம் ஷாஃபி பள்ளி : 1973
    • காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி: 1982
    • தனலக்ஷ்மி வங்கி : 1984 
    • ஷிஃபா மருத்துவமனை : 1988 
    • பைத்துல்மால் பொது நிறுவனம் : 1993
    • இந்தியன் வங்கி : 1994
    • பாரத ஸ்டேட் வங்கி : 2010
நன்றி : அதிரை A. ஆபிதீன் D.E.E  ( பொது அறிவு களஞ்சிய நிபுணர்)

வியாழன், 21 ஜூலை, 2011

மரங்களை வளர்ப்போம்!

  • ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை
  • உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்
  • மரம் நமக்கு என்ன தருகிறது?
  • மலர்கள், காய், கனிகள் தருகிறது
  • நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
  • காற்றை சுத்தப்படுத்துகிறது
  • நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • கார்பன்-டை-ஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
  • மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
  • மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
  • காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
  • ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
  • ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
  • ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
  • ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன்- டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
  • மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.          
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:
        மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

     நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

     மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங் களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

     மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

  
    மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.

     இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.
       மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

     கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

    புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

     உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

    மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

ஆகவே ஒவ்வொர்வரும் தம் வீட்டில் ஒரு மரத்தை கண்டிப்பாக  வளர்க்க சபதம் ஏற்போம்.! நமது ஊரில் பசுமை       புரட்சியை                  ஏற்படுத்துவோம்.! !

ஞாயிறு, 17 ஜூலை, 2011

“பராஅத்” இரவு சிறப்புகள் பற்றிய‌ ஹதீஸ்கள்


       “அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். -திர்மிதீ

         “ஷஃபானில் 15ஆம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.-இப்னுமாஜா.

          ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு,ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு,இருபெருநாட்களின் இரவு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.-பைஹகீ.

         ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378)

அதிகமான நோன்பு நோற்ற மாதம்
         நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)